தன்னிகரற்ற நடிகராக தனது ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து தனக்கென தனி பாணியில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்காகவும் மிகவும் மெனக்கெட்டு நடித்து ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விக்ரம். அந்த வகையில் கடந்த 2022ம் ஆண்டில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்த மகான், டிமான்டி காலனி & இமைக்கா நொடிகள் படங்களின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பல வித்தியாசமான கெட்டப்களில் மிரட்டலான இரட்டை வேடத்தில் விக்ரம் நடித்த கோப்ரா, அமரர் கல்கியின் அற்புத நாவலான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பிரம்மாண்ட படைப்பாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த பொன்னியின் செல்வன் ஆகிய 3 படங்களிலும் மிகச் சிறப்பாக நடித்து அனைத்து ரசிகர்களின் இதயங்களையும் கவர்ந்தார் விக்ரம்.

தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் இந்த 2023 ஆம் ஆண்டில் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இதனிடையே தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகும் லியோ திரைப்படத்திலும் சீயான் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. முன்னதாக விக்ரம் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா மிரட்டியது போல ஒரு மிரட்டலான கதாபாத்திரத்தில் சீயான் விக்ரம் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. இது குறித்த நம்பத்தகுந்த அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரிசையில் அடுத்ததாக முதல் முறை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்து வருகிறார். 1800-களின் காலகட்டத்தில் நடைபெறும் பீரியட் திரைப்படமாக கேஜிஎஃப் கதை களத்தை மையப்படுத்தி பிரம்மாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகும் தங்கலான் திரைப்படத்தை தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா அவர்களின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து வழங்குகின்றன.

சீயான் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் தங்கலான் திரைப்படத்தில் நடிக்கின்றனர். கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் தங்கலான் திரைப்படத்திற்கு GV.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் PAN INDIA படமாக ரிலீசாக உள்ள தங்களான் திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகான OTT ரிலீஸ் உரிமையை நெட் கிளிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பிற்கு இடையே படப்பிடிப்பில் இருக்கும் தனது புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகை பார்வதி, “நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பு… அவள் என்னை கண்டுபிடித்தாள்… என்னை அவள் தடுக்கிறாள்… அவள் தான் நான்… மற்றும் நான் தான் அவள்…” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நடிகை பார்வதியின் தங்கலான் பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ…