தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு நீண்ட காலமாக காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்றான சீயான் விக்ரம் - இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியின் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடலாக ஹிஸ் நேம் இஸ் ஜான் என்ற பாடல் தற்போது வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷங்களில் ஒன்றாக நடிப்பின் அசுரனாக திகழும் சீயான் விக்ரம் படத்திற்கு படம் வித்தியாசமான கதை கலங்களையும் நல்ல நல்ல கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் இதயங்களில் தனக்கென தனி இடம் பிடித்தவர். அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக தொடர்ந்து சிறந்த படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் முதல் முறையாக தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் நடித்திருக்கிறார்.1800-களின் காலகட்டத்தில் கே ஜி எஃப் கதைக்களத்தை மையப்படுத்திய அதிரடி பீரியட் ஆக்சன் திரைப்படமாக தயாராகி இருக்கும் இந்த தங்கலான் திரைப்படம் 3D தொழில்நுட்பத்தில் வெளிவர இருக்கிறது. சமீபத்தில் தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே முதல்முறையாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்த திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியில் பக்கா ஸ்டைலான படங்களை கொடுத்து வரும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த துருவ நட்சத்திரம் திரைப்படம் பல்வேறு காரணங்களால் இடையே தடைபட்டு நின்று கடந்த ஆறு ஆண்டுகளில் வெவ்வேறு கட்டங்களாக பலமுறை படப்பிடிப்புகள் நடைபெற்று கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. சீயான் விக்ரமுடன் இணைந்து ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளாக நடிக்க, இயக்குனர் பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி-DD , விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா, சதீஷ் கிருஷ்ணன், முன்னா சைமன், மாயா கிருஷ்ணன், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஒன்றாக என்டர்டைன்மென்ட், கொண்டாடுவோம் என்டர்டைன்மென்ட் & எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள, துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் முதல் அறிவிப்பு ப்ரோமோ வெளிவந்த சமயத்தில் இருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக இப்படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்தாக விரைவில் துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸாக இருப்பதாகவும் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சமீபத்தில் அறிவித்திருந்தார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள, துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் முதல் பாடல் ஏற்கனவே ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நிலையில், தற்போது துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “ஹிஸ் நேம் இஸ் ஜான்” பாடல் தற்போது வெளியானது. செம்ம ஸ்டைலாக வந்த “ஹிஸ் நேம் இஸ் ஜான்” என்ற துருவ நட்சத்திரம் படத்தின் அதிரடியான அந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.