ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் சீயான் விக்ரம் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியின் துருவ நட்சத்திரம் பட இரண்டாவது பாடலின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டது. தமிழ் சினிமாவின் நடிப்பின் அசுரனாக திகழும் சீயான் விக்ரம் கடைசியாக இயக்குனர் மணிரத்னம் தனது கனவு படமாக இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் எனும் அட்டகாசமான கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து அனைத்து ரசிகர்களின் இதயங்களையும் கொள்ளையடித்தார். அடுத்ததாக முதல் முறை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்து வருகிறார். 1800-களின் காலகட்டத்தில் நடைபெறும் பீரியட் திரைப்படமாக கேஜிஎஃப் கதை களத்தை மையப்படுத்தி பிரம்மாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகும் தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இதனிடையே சீயான் விக்ரம் - இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் பக்கா ஸ்டைலான ஆக்சன் திரில்லர் படமாக தயாராகிருக்கும் திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு தயாராகிய துருவ நட்சத்திரம் திரைப்படம் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு நின்றது. ஆறு ஆண்டுகளாக வெவ்வேறு கட்டங்களாக நடைபெற்ற துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதத்தில் நிறைவடைந்தது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்தும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வம் மட்டும் இப்போதும் குறையவில்லை. ஒவ்வொரு முறை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் போதும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த கேள்விகள் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு கொண்டு தான் இருந்தன. கடந்த ஆண்டு(2022) தனது இயக்கத்தில் சிலம்பரசன்.TR நடித்து வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விரைவில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை, வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்திருந்தார்.

ஒன்றாக என்டர்டைன்மென்ட், கொண்டாடுவோம் என்டர்டைன்மென்ட் & எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க, கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் சீயான் விக்ரமுடன் இணைந்து ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளாக நடிக்க, இயக்குனர் பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி-DD , விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா, சதீஷ் கிருஷ்ணன், முன்னா சைமன், மாயா கிருஷ்ணன், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றதாகவும் தொடர்ந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் அறிவித்தனர்.

எனவே வெகு விரைவில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியானது. “ஹிஸ் நேம் இஸ் ஜான்” என்ற துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாவது பாடல் வருகிற ஜூலை 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு போஸ்டர் இதோ…