கடாரம் கொண்டான் படத்தின் ரிலீஸை அடுத்து சீயான் விக்ரம் மகான்,பொன்னியின் செல்வன்,கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இந்த மூன்று படங்களின் ஷூட்டிங்கையுமே சமீபத்தில் நிறைவு செய்தார் சீயான் விக்ரம்.மகான் படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.இந்த படத்தில் இவருடன் இணைந்து இவரது மகன் துருவ் விக்ரமும் நடித்துள்ளார்

இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கின்றனர்.இந்த படத்தின் அறிவிப்பின் முதலே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.இந்த படத்தில் சிம்ரன்,பாபி சிம்ஹா,வாணி போஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்நடித்துள்ளனர்.

இந்த படத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரமின் பர்ஸ்ட்லுக்,மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி தமிழ்,தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த படத்தின் இரண்டாவது பாடல் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த படத்தில் இருந்து சிம்ரன்,சனந்த் உள்ளிட்ட சிலரின் கேரக்டர் போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்றியுள்ளன.

.@SimranbaggaOffc as #Naachi#Sananth as #Rocky @ActorMuthukumar as #Gnanam in #Mahaan

Watch #MahaanOnPrime @PrimeVideoIN frm FEB10#ChiyaanVikram #DhruvVikram

A @karthiksubbaraj Padam🎥
A @Music_Santhosh Musical🎶#MahaanFromFEB10@7screenstudio @SonyMusicSouth pic.twitter.com/N4U8ZwwOn1

— Yuvraaj (@proyuvraaj) January 29, 2022