தமிழ் திரை உலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் முன்னணி கதாநாயகனாகவும் வலம் வரும் நடிகர் சீயான் விக்ரம் அவர்களின் மகன் துருவ் விக்ரம் தற்போது தமிழ் திரையுலகில் நடிகராக நடித்து வருகிறார். முன்னதாக தெலுங்கில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்து சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்காக வெளிவந்த ஆதித்யா வர்மா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதனை அடுத்து முதல்முறையாக சீயான் விக்ரமுடன் இணைந்து துருவ் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் மகான். முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மகான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் காந்திமகான் எனும் கேரக்டரிலும், துருவ் விக்ரம் தாதா எனும் கேரக்டரிலும் தந்தை-மகன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மேலும் இவர்களுடன் இணைந்து பாபிசிம்ஹா, சிம்ரன், வாணிபோஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள மகான் திரைப்படத்தை ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் S.S.லலித் குமார் தயாரித்துள்ளார்.

நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி ரிலீசாக உள்ள மகான் திரைப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். முன்னதாக வெளிவந்த மகான் திரைப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த பாடலாக மகான் படத்தில் இருந்து மிஸ்ஸிங் மீ பாடல் நாளை(பிப்ரவரி 8) வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் துருவ் விக்ரம் பாடி, நடித்துள்ள மகான் திரைப்படத்தின் மிஸ்ஸிங் மீ பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. மிரட்டலான அந்தப் ப்ரோமோ இதோ…

It's never all black and white you
see!! #DhruvVikram's #MissingMe from #Mahaan Out Tomorrow @SonyMusicSouth 🔥

A @Music_Santhosh Musical 🪘#ChiyaanVikram @karthiksubbaraj

Watch #MahaanOnPrime, Feb 10
only on @PrimeVideoIN pic.twitter.com/KhpsKvNTe8

— Seven Screen Studio (@7screenstudio) February 7, 2022