A.R.முருகதாசின் உதவி இயக்குனராக இருந்து டிமாண்டி காலனி படம் மூலம் இயக்குனர் ஆனவர் அஜய் ஞானமுத்து.இந்த படம் மிக சிறந்த பேய் படம் என பலரது வரவேற்புகளை பெற்றது.இதனை தொடர்ந்து இவர் இயக்கிய இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா,அதர்வா,அனுராக் காஷ்யூப்,விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.ஹிப்ஹாப் தமிழா இசையமைத்த இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் கோப்ரா படத்தினை இயக்கிவந்தார்.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஆனந்த் ராஜ்,ரோபோ ஷங்கர்,மியா ஜார்ஜ்,மிர்னாலினி ரவி,பூவையார்,கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நட்சத்திர கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் முதல் பாடல் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிரச்செய்தது.சீயான் விக்ரம் பல வித்தியாச கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்த இந்த டீஸர் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்து வந்தது.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் நிறைவடைந்தது.இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது.நாளை சீயான் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு புது செம மாஸ் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த போஸ்ட்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்,இந்த படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Wishing the Iconic,Super Talented and the Most Inspiring #ChiyaanVikram sir a fantastic birthday 🎂 #Cobra 2nd Single Announcement Tomorrow on #Chiyaan's birthday 🥁 #April17

An @AjayGnanamuthu Film 🎬
An @arrahman Musical 🥁@SonyMusicSouth @proyuvraaj #HBDChiyaanVikram pic.twitter.com/LDzhQXkuHQ

— Seven Screen Studio (@7screenstudio) April 16, 2022