டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக விக்ரம்-58 படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. கே.ஜி.எஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். கிரிக்கெட்டர் இஃர்பான் பதான் வில்லனாக அறிமுகமாகிறார்.

தற்போது இந்த படத்தின் டைட்டில் கோப்ரா என்பது மோஷன் போஸ்டர் மூலம் தெரியவந்தது. இந்த மோஷன் போஸ்டர் இணையத்தை தெறிக்க விடுகிறது என்று கூறினால் மிகையாகாது.