தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கி முடியும் கட்டத்திற்கு வந்தடைந்தது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் வார இறுதியில் வந்து அசத்துகிறார்.

பிக் பாஸ் 3-க்கான டாஸ்க்குகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. லாஸ்லியா புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இறுதியாக ஃபாத்திமா பாபு, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, மதுமிதா, அபிராமி மற்றும் கஸ்தூரி வீட்டை விட்டு வெளியேறினார்கள். சமீபத்தில் வனிதா வீட்டை விட்டு வெளியேறினார்.

தற்போது வெளியான ப்ரோமோவில், சேரன் தன்னை பற்றி பெருமையாக கூறி கொள்கிறார். அனைவரது ஆர்மியும் சேரனை விரும்புவார்கள் என கூறி முதல் மதிப்பெண் வழங்குகிறார்.

#Day86 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/oWpsytFbv0

— Vijay Television (@vijaytelevision) September 17, 2019