லேண்டர் விக்ரமிடமிருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சந்திரயான் 2 விண்கலத்தின், 'லேண்டர்' கருவி, நிலவில் தரையிறங்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைக் காண உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது.

அதன்படி சந்திரயான் 2 விண்கலத்தின், 'லேண்டர்' கருவி, இன்று அதிகாலை, 2.15 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த நேரத்தில், லேண்டரிலிருந்து சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனை, இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.

அதன்படி, 2.1 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பிறகு லேண்டர் பாதை மாறியதாகவும் தெரிகிறது. அதன் வேகமும் கட்டுப்பாட்டை இழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

லேண்டர் விக்ரமிடமிருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனையடுத்து, அடுத்து என்ன செய்யலாம் என்று விஞ்ஞானிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.