தென்னிந்தியாவில் தனது பவ்யமாக முகத்துடன் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி அழகில் சீக்கிரமே ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் பிரியங்கா மோகன். தெலுங்கில் பிரபல நடிகர் நானியின் சூப்பர் ஹிட் திரைப்படமான ‘கேங் லீடர்’ படத்தில் அறிமுகமானவர் பிரியங்கா. முதல் படத்திலே கியூட்டான நடிப்பினை வெளிப்படுத்தி தென்னிந்தியா முழுவதும் பல ரசிகர்களை உருவாக்கினார். பின் தொடர்ந்து ஸ்ரிகம் என்ற தெலுங்கு படத்தில் நடிக்க அதே ஆண்டில் தமிழில் முன்னணி நடிகராய் வலம் வரும் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அட்டகாசமான தமிழில் என்ட்ரி கொடுத்தார். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் காமெடி திரில்லர் திரைப்படமாக உருவான டாக்டர் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். முதல் படத்திலே தமிழ் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்த பிரியங்கா தொடர்ந்து சூர்யாவுடன் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்திலும் மீண்டும் சிவகார்த்திகேயன் அவருடன் ‘டான்’ படத்திலும் நடித்து கவனம் பெற்றார்.

பின் தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரியங்கா மோகன் அவர்களுக்கு வாய்ப்பு வர தொடங்கியது அதன்படி தற்போது தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ரசிகர்களின் மனதை வென்ற கதாநாயகியாக வலம் வரும் பிரியங்கா மோகன் அவர்களுக்கு தற்போது அட்டகாசமான வாய்ப்பு அடித்துள்ளது. தெலுங்கில் முன்னணி ஹீரோவாக நின்று கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் பவன் கல்யான் தற்போது OG என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார்.

டிவிவி தான்யா தயாரிப்பில் சுஜீத் இயக்கி வரும் ஒஜி படத்தின் மோஷன் போஸ்டர் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அட்டகாசமான ஆக்ஷன் திரைப்படமாக இப்படம் உருவாக அதிக வாய்ப்பு உள்ளது என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் படத்தின் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் அந்த அப்டேட்டினை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர். தொடர்ந்து தமிழிலும் தெலுங்கு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடைய படங்களில் பிரியங்கா மோகன் நடித்து வருவதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இதனை கொண்டாடி வருகின்றனர்.