தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.கடைசியாக இவரது மாறன்,தி கிரே மேன் படங்கள் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம்,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம்,வாத்தி,கேப்டன் மில்லர் என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.திருச்சிற்றம்பலம் படம் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

கேப்டன் மில்லர் படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தினை ராக்கி,சாணிக்காயிதம் பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.ஜீ வி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.பீரியட் ஆக்ஷன் படமாக இந்த படம் உருவாகவுள்ளது.2023 கோடை விடுமுறைக்கு இந்த படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டர் மற்றும் வீடீயோவெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.நேற்று தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.இந்த போஸ்ட்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்

போர் வரும் நாள் எண்ணி

கூர்கொண்ட ஆயுதமாய்

களம் காண
காத்திருக்கும்

எங்கள் #கேப்டன்மில்லர் @dhanushkraja அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ! #CaptainMiller@ArunMatheswaran @gvprakash pic.twitter.com/uBfw6wkeK8

— Sathya Jyothi Films (@SathyaJyothi) July 28, 2022