விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தீபாவளி விருந்தாக வெளியாகியுள்ள திரைப்படம் பிகில்.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் தீபாவளியையொட்டி நேற்று வெளியானது.

இந்த படத்திற்கு முதலில் சிறப்பு காட்சிகள் பல இடங்களில் திரையிடப்பட்டது.முதலில் இந்த படத்திற்கு சிறப்பு காட்சிகள் அனுமதிக்கப்படவில்லை பின்னர் அனுமதிக்கப்பட்டது.சில இடங்களில் படம் தொடங்குவதில் சற்று தாமதமானது,சில இடங்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரியில் உள்ள பிரபல திரையரங்கில் சிறப்பு காட்சி கைதுசெய்யப்பட்டது.இதனால் கோபமான ரசிகர்கள் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தினர்.இந்த வீடீயோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தது.இது குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிகில் எவ்வளவு சாதனைகளை செய்தாலும் இந்த வன்முறை தான் முதலில் நியாபகம் வரும்.உண்மையான விஜய் ரசிகர்கள் இந்த செயலை செய்யவில்லை என்று நம்புவோம்.இப்படிப்பட்ட செயல்களை செய்து உங்கள் ஹீரோவின் பெயரை நீங்களே கெடுத்துவிடாதீர்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Whatever records #bigil goes on to create, It will always be remembered for the vandalism displayed today. We may give excuses, claim it was the work of haters, but heart of heart we know the truth. True fans must never let ANYONE bring shame to their idol. #Krishnagiri 😢 pic.twitter.com/8zamT5dViR

— Kasturi Shankar (@KasthuriShankar) October 25, 2019

Not a single woman, kid or older person to be seen- all the vandals are young men. Are these the future of TamilNadu?

விஜயின் ரசிகனோ எதிரியோ என்னவோ. எல்லோரும் இளைஞர்கள். ஒரு சினிமா காட்சிக்காக பொதுச்சொத்தை அழிக்கும் இவர்கள்தான் வருங்கால தமிழகத்தின் விடிவெள்ளிக்களா ? அய்யோ.

— Kasturi Shankar (@KasthuriShankar) October 25, 2019