விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளராகும்,சீரியல் நடிகராகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின்.பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்தார் கவின்.சத்ரியன்,நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.

இதனை அடுத்து இவர் நடித்த அஸ்கு மாறோ என்ற ஆல்பம் பாடல் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.Ekaa எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் இவர் நடித்த லிப்ட் படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

படங்களில் நடிப்பது மட்டுமின்றி டாக்டர்,Beast உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி அசத்தி வருகிறார் கவின்.இவர் அடுத்ததாக விக்னேஷ் சிவன்,நயன்தாரா தயாரிப்பில் உருவாகும் ஊர்குருவி படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.கவின் ஆகாஷ் வாணி என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்துள்ளார்.

ரெபா மோனிகா ஜான் இதில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த சீரிஸை அட்லீயின் உதவி இயக்குனரான Enoc Able இயக்கியுள்ளார்.இந்த சீரிஸ் ஆஹா தமிழ் OTT தளத்தில் வெளியாகவுள்ளது.இந்த ரொமான்டிக் வெப் தொடரின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த பர்ஸ்ட்லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Happy to launch the First Look poster of @ahaTamil original #AkashVaani 😍Congratulations and All the very best to the whole team for a fun romantic reunion!💕💕#AkashVaaniFL #RomanticReunion@ahatamil @Kavin_m_0431 @Reba_Monica @kaustubha_media @enoc_able @ramanagirivasan pic.twitter.com/dPpOOnKlBO

— Arya (@arya_offl) January 29, 2022