தமிழ் சினிமாவின் மிக முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக நல்ல திரைப்படங்களை தயாரிப்பதோடு சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வரும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம், அஜித் குமார் நடிப்பில் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமாக வெளிவந்து சூப்பர் ஹிட்டாகியுள்ள துணிவு திரைப்படத்தை வெளியிட்டு 2023-ஆம் ஆண்டை மாபெரும் வெற்றியோடு தொடங்கியுள்ளது.

அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் வாத்தி திரைப்படம் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இந்த வரிசையில் அடுத்ததாக பிக் பாஸ் போட்டியாளரும் பிரபல நடிகருமான கவின் கதாநாயகனாக நடித்துள்ள டாடா திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

கவினுடன் இணைந்து அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடிக்க, இயக்குனர் கே.பாக்கியராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் ஆகியோர் டாடா படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவீஸ் சார்பில் S.அம்பேத் குமார் தயாரித்துள்ள டாடா திரைப்படத்திற்கு எழில் அரசு.K ஒளிப்பதிவில், கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.

டாடா திரைப்படம் இந்த 2023 ஜனவரி மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டாடா திரைப்படத்திலிருந்து கிருட்டு கிருட்டு எனும் பாடல் நாளை ஜனவரி 21ஆம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் கலக்கலான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ…