சம கால தமிழ் சினிமாவில் பெரும்பாலான திரைப்படங்கள் எதிர்பார்க்காத அளவு வரவேற்பு பெற்று பார்வையாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறது. அந்த வரிசையில் இந்த படமும் சர்ப்ரைஸ் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படும் திரைப்படம் கவின் நடிப்பில் நாளை வெளியாகவிருக்கும் ‘டாடா. கல்லூரி வாலிபன் தகப்பனாக சந்திக்கும் பிரச்சனைகளை நகைச்சுவையுடன் எமோஷனல் கதையம்சத்துடன் வெளியாகவிருக்கின்றன. இப்படத்தில் கவினுடன் இணைந்து அபர்ணா தாஸ், பாக்யராஜ், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ், ஐஸ்வர்யா பாஸ்கரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜென் மார்டின் இசையில் பாடல்கள் ஏற்கனவே வரவேற்பு பெற்ற நிலையில் படத்தின் டிரைலரும் பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. நாளை தமிழகமெங்கும் 400 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கவினின் டாடா திரைப்படம் தமிழகமெங்கும் வெளியாகவிருக்கும் நிலையில் படத்தின் சிறப்பு காட்சியை வெளியிட்டுள்ளது படக்குழு. காதலிக்காக தற்கொலை செய்யவிருக்கும் இளைஞனை சாமர்த்தியமாக காப்பாற்றும் கவின். நகைச்சுவை கலந்த காட்சி தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

ஒலிம்பியா மூவீஸ் சார்பில் S.அம்பேத் குமார் தயாரித்துள்ள டாடா திரைப்படத்திற்கு எழில் அரசு.K ஒளிப்பதிவில், கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பு செய்த டாடா படத்தின் தமிழ்நாடு வினியோகஸ்த உரிமத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு பெருமபாலான படங்களை வாங்கிய ரெட் ஜெயண்ட் மூவிஸ் பீஸ்ட், டான் நெஞ்சுக்கு நீதி, விக்ரம், திருச்சிற்றம்பலம், சர்தார், லவ் டுடே, கட்டா குஸ்தி ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட அடித்த படங்களை கொடுத்தது. தற்போது டாடா படத்தின் உரிமத்தை பெற்றுள்ள நிலையில் இந்த படமும் ரெட் ஜெயண்ட் மூவிஸின் பிளாக் பஸ்டர் ஹிட் படங்களின் வரிசையில் இடம் பெறுமா என்பதே பெரும்பாலோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.