உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மிகச்சிறந்த நகைச்சுவை திரைப்படங்களில் மிகவும் முக்கியமான திரைப்படம் மைக்கேல் மதன காம ராஜன். இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் நான்கு வித்தியாசமான கதாபாத்திரங்களில் கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இத்திரைப்படத்தில் பணக்கார கதாபாத்திரமாக கமல்ஹாசன் நடித்த மதன் கதாபாத்திரத்தோடு இணைந்து படம் முழுக்க பயணிக்கும் மிக முக்கிய கதாபாத்திரம் பீம். பீம்பாய் எனும் இந்த கதாபாத்திரத்தில் 6 அடி 5 அங்குல உயரத்தோடு ஆஜானுபாகுவான தோற்றத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகர் பிரவீன் குமார் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்.

ஹிந்தியில் வெளிவந்த மகாபாரதம் மெகா தொடரில் பீம் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்த நடிகர் பிரவீன் குமார் அதுமுதல் பீம் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்காக ஆசிய கோப்பையில் தட்டு எறிதலில் தங்கப்பதக்கம் வென்றுள்ள பிரவீன்குமார் நடிகராக இந்தியாவின் பல மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் பிரவீன் குமார் நேற்று (பிப்ரவரி 7) மாரடைப்பால் காலமானார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் பிரவீன் குமாரின் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. மறைந்த நடிகர் பிரவீன் குமாருக்கு வயது 74. நடிகர் பிரவீன் குமாரின் மறைவுக்கு இந்திய திரையுலகமும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Praveen Kumar Sobti, popular for playing the role of Bheem in BR Chopra’s Mahabharat, passed away today in Delhi. He will be cremated at the crematorium ground in Punjabi Bagh today. pic.twitter.com/0yzp4AMmzx

— ANI (@ANI) February 8, 2022