விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.2019 பிப்ரவரியில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.ரோஷினி ஹரிப்ரியன் இந்த தொடரின் நாயகியாக நடித்துள்ளார்.அருண் பிரசாத் இந்த தொடரில் ஹீரோவாக நடித்துள்ளார்.ரூபா ஸ்ரீ,கண்மணி மனோகரன்,காவ்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த தொடர் விஜய் டிவியின் TRPயை அல்லும் முக்கிய தொடர்களில் ஒன்று.இந்த தொடரில் நடித்து வரும் பல நட்சத்திரங்களும் இந்த தொடரின் மூலம் பிரபலங்களாக மாறிவிட்டனர்.ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள இந்த தொடர் 500 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரில் இருந்து சில காரணங்களால் நாயகி கண்ணம்மாவாக நடித்து அசத்தி வந்த ரோஷ்ணி விலகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது இவர் திடீரென்று விலகியது ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவருக்கு பதிலாக டிக்டாக் மூலம் பிரபலமான மாடல் நடிகை வினுஷா தேவி நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி வந்தது.தற்போது இவர் நடிப்பதை உறுதிசெய்யும் படி தனது விஜய் டிவி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.இவரது எபிசோடுகள் நாளை முதல் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இனி கண்ணம்மாவாக..!

பாரதி கண்ணம்மா - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில #BarathiKannamma #VijayTelevision pic.twitter.com/F1kNwvHCtK

— Vijay Television (@vijaytelevision) November 13, 2021