பிரபல தொகுப்பாளராக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கி பின்னர் பல முன்னணி சேனல்களின் சீரியல்களில் பணிபுரிந்து அசத்தியவர் ஃபரீனா.சில சூப்பர்ஹிட் சீரியல்களில் சின்ன வேடங்களில் நடித்த இவர் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையும் பெற்றிருந்தார்.

இந்த தொடரில் முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் ஃபரீனா அசாத் நடித்து வருகிறார்,இந்த கதாபாத்திரத்தில் நடித்து சில விருதுகளையும் வென்று அசத்தினார்.வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வரும் இவர் இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருப்பார்.

2017-ல் Rahman Ubaidh என்பவரை திருமணம் செய்துகொண்டார்,இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் சில மாதங்களுக்கு முன் கர்பமாக இருப்பதை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார் ஃபரீனா.இவருக்கு பல ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தனது கர்ப்பகால புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துவந்தார் ஃபரீனா.மேலும் தொடர்ந்து சீரியலிலும் நடித்து அசத்தி வந்தார்.தற்போது தனக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளான் என்ற தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஃபரீனா , இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by farina azad (@farina_azad_official)