கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த பெரிய ஹிட் தொடர்களில் ஒன்று திருமணம்.இந்த தொடரில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஷெரின் ஜானு.இந்த தொடரில் நடித்து தனது நடிப்பிற்காக பல பாராட்டுகளை பெற்றார் ஷெரின் ஜானு.
அடுத்தாக சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் தொடரான லக்ஷ்மி ஸ்டோர்ஸ் தொடரிலும் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தினார் ஷெரின் ஜானு.2018-ல் வெளியான கூட்டாளி என்ற படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
இதனை தொடர்ந்து விஜய் டிவியில் பெரிய ஹிட் அடித்து வரும் பாரதி கண்ணம்மா தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.துளசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறிவிட்டார் ஷெரின் ஜானு.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.
தற்போது இவர் சமீபத்தில் தொடங்கிய நம்ம வீட்டு பொண்ணு என்ற புதிய தொடரில் இணைந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த தொடரின் நாயகன் சுர்ஜித் இது குறித்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இவரது புதிய தொடர் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.