விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.விஜய் டிவியின் நம்பர் 1 தொடராக இந்த தொடர் இருக்கிறது.அருண் மற்றும் வினுஷா தேவி இந்த தொடரின் முன்னணி வேடங்களில் நடித்து வருகின்றனர்.

ரூபாஸ்ரீ,பரினா,அருள்ஜோதி,சுகேஷ்,ரேகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த தொடரில் நடித்து வருகின்றனர்.1000 எபிசோடுகளை நெருங்கி விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடர் விஜய் டிவியின் மிகப்பெரிய ஹிட் தொடராக வலம் வருகிறது.

இந்த தொடரில் இரண்டாவது நாயகனாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்திருப்பவர் சுகேஷ்.இவருக்கு சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது என்ற தகவலை சில புகைப்படங்களுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தனது கல்லூரி கால நண்பர் நந்தினி மணிமாறனை திருமணம் செய்துள்ளதாக நற்செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொண்டுள்ளார்.புதுமண தம்பதிக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by 👑Sugesh Rajendran (@sugesh_quasiofficially)