கடந்த 1993 ல் ஏவிஎம் தயாரிப்பில் ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் ‘எஜமான் கிராமத்து பின்னணியில் ஊர் கௌரவத்தில் இருக்கும் எஜமான் கந்தவேலு வானவராயன் சந்திக்கும் நிகழ்வுகளை அற்புதமான உணர்வுகளுடன் வெளியான திரைப்படம் எஜமான். ரசிகர்களின் ஆரவராமான வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக எஜமான் அமைந்தது. இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து மீனா, நெப்போலியன், ஐஸ்வர்யா, விஜய குமார்,மனோரமா, கவுண்டமணி, செந்தில், நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பார்.

30 ஆண்டுகளை கடந்திருந்த எஜமான் திரைப்படத்தை கொண்டாடும் விதத்தில் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளது. அதில்,

“எஜமான் வெளியான தருணத்தில் திரைப்படம் குறித்து பார்வையாளர்கள் கடிதங்கள் மூலம் உங்கள் கருத்துகளை அஞ்சல் மூலம் அனுப்பி வைக்குமாறு அன்று ஏவிஎம் சரவணன் கேட்டிருந்தார். அதில் எஜமான் திரைப்படத்திற்கு அதிகளவு கடிதங்கள் வந்த வண்ணம் இருந்தது. அதில் ரசிகை ஒருவர் எஜமான் திரைப்படத்தை பார்த்து கவரப்பட்டிருக்கிறார். தனது வருங்கால கணவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்குமெனில் நான் வானவராயர் போல் இருப்பவரை தேர்ந்தெடுத்து உடனடியாக திருமணம் செய்து கொள்வேன்” என்று தெரிவித்திருந்தார். ஏவிஎம் விளம்பர குழு இதனை படத்தின் விளம்பரத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டது. ஆனால் உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் பயன்படுத்த முடியாது.

அதனால் கடிதம் எழுதியவற தேடி கண்டுபிடித்து அவரிடம் விளம்பர குழு கேட்டுள்ளது. ஆரம்பத்தில் தனது தந்தையை நினைத்து பயந்தார். ஆனால்ஆச்சர்யம் என்னவென்றால் அவரது அப்பா கடிதத்திற்கான ஒப்புதல் மட்டுமல்லாமல் மகளின் புகைப்படத்தையும் சேர்த்து கொடுத்தார். இந்த கடிதம் தான் பெருவாரிய வரவேற்பை மக்களிடம் கிடைக்க காரணமாக இருந்தது. இதுமட்டுமல்லாமல் ஒரு ஆண் “நான் வைதீச்வரி போன்ற பெண்ணை தேடி கண்டுபிடித்து திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறேன்” என்று எழுதியிருந்தார். இதுபோன்ற மக்களுடன் வரவேற்பு தான் படத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்க காரணமாக இருந்தது.” என்று பகிர்ந்துள்ளது ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம்.

30 ஆண்டுகளை கடந்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள எஜமான் படத்தை சமீபத்தில் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில் ஏவிஎம் வெளியிட்டுள்ள இந்த கடிதம் குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.