தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் தீபாவளியையொட்டி கடந்த 25ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வரும் இந்த படம் குறித்து அட்லீ சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.பிகில் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பிகில் 2வில் ராயப்பன் எப்படி உருவானார் என்பது குறித்து படம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் விஜய்க்கு ஒரு ரொமான்டிக் கதை கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.