முதல்முறையாக நடிகர் அதர்வா இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் நடிகர் மணிகண்டன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் அதிரடியான மத்தகம் வெப்சீரிஸின் ட்ரெய்லர் தற்போது வெளியானது. தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் அதர்வா நடிப்பில் இந்த 2023 ஆம் ஆண்டில் அட்ரஸ், தனல் மற்றும் நிறங்கள் மூன்று ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. இதனிடையே நவரசா ஆந்தாலஜி சீரிஸுக்கு பிறகு தனது திரைப்பயணத்தில் முதல் முறையாக மத்தகம் எனும் புதிய வெப்சீரிஸில் அதர்வா நடித்திருக்கிறார். இந்த மத்தகம் வெப் சீரிஸில் ஜெய் பீம், குட் நைட் படங்களின் நடிகர் மணிகண்டன் மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதலும் கடந்து போகும், விக்ரம் வேதா, காலா, சில்லு கருப்பட்டி, ஏலே, நெற்றிக்கண், ஜெய்பீம், சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட படங்களில் வசனகர்த்தாவாகவும் மிக முக்கிய நடிகராகவும் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மணிகண்டன் நடிப்பில் கடைசியாக சமீபத்தில் வெளிவந்த குட் நைட் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அதேப் போல் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும் தற்போது குறிப்பிடப்படும் நடிகராகவும் வலம் வரும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சீயான் விக்ரம் நடித்த நீண்ட காலமாக ரிலீசுக்கு காத்திருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நடிகராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் லியோ திரைப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் கௌதம் வாசுதேவன் நடித்திருக்கிறார். அந்த வரிசையில் முன்னதாக பாவக்கதைகள் மற்றும் நவரசா ஆகிய ஆந்தாலஜி வெப் சீரிஸ்களை தொடர்ந்து, தற்போது இந்த புதிய மத்தகம் முன்னணி கதாபாத்திரத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்திருக்கிறார். இதனை அடுத்து தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் விரைவில் வெளிவர இருக்கும் மத்தகம் வெப்சீரிஸில் முன்னணி கதாபாத்திரத்தில் மணிகண்டன் நடித்துள்ளார். சசிகுமாரின் கிடாரி மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.J.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் வெப் சீரிஸான குயின் வெப் சீரிஸை இயக்கிய இயக்குனர் பிரசாத் முருகேசன் இந்த மத்தகம் வெப்சீரிஸை இயக்கியுள்ளார்.

விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் ட்ரீட்டாக வர இருக்கும் மத்தகம் வெப் சீரிஸில் அதர்வா, கௌதம் வாசுதேவ் மேனன், மணிகண்டன் ஆகியோருடன் இணைந்து நிகிலா விமல், திவ்யதர்ஷினி, இளவரசு, வடிவுக்கரசி, மூணார் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய இடங்களில் நடித்துள்ளனர். AM.எட்வின் சாகே ஒளிப்பதிவில், பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு செய்திருக்கும் மத்தகம் வெப்சீரிசுக்கு தர்பூக்கா சிவா இசையமைத்திருக்கிறார். வருகிற ஆகஸ்ட் 18ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் மத்தகம் வெப் சீரிஸ் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் முதல் முறையாக அதர்வா, இயக்குனர் கௌதம் பாஸ்கர் மேனன், மணிகண்டன் கூட்டணியில் தயாராகி இருக்கும் மத்தகம் வெப் சீரிஸின் அதிரடியான ட்ரெய்லர் தற்போது வெளிவந்துள்ளது. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மத்தகம் ட்ரெய்லர் இதோ…