அசுரன் படத்தின் இரண்டாம் மேக்கிங் வீடியோ தற்போது வெளியானது. கத்தரி பூவழகி பாடலின் வீடியோ காட்சிகள் உருவான விதம் குறித்த இந்த வீடியோ இணையத்தில் பெரிதளவில் ஈர்க்கப்பட்டு வருகிறது. நேற்று திரைக்கு வந்த இப்படம் அமோக வரவேற்பை பெற்றது.

தமிழ் சினிமாவின் பல வெற்றி படைப்புகள் தந்த வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ளார். கலைப்புலி S தாணு இப்படத்தை தயாரித்துள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களுக்கு பிறகு இந்த படமும் தனி சிறப்பை பெற்றது.

தனுஷ் இரண்டு கெட்டப்பில் நடித்த இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார் மேலும் படத்தில் நடிகர் கருணாஸ் மகன் முக்கிய பாத்திரத்தில் நடித்தார் என்பது நாம் அறிந்தவையே. படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி அசத்தி வருகிறது.