தமிழ் சினிமாவின் பல வெற்றி படைப்புகள் தந்த வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு அசுரன் என பெயரிடப்பட்டுள்ளது. கலைப்புலி S தாணு இப்படத்தை தயாரிக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களுக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் உடன் தனுஷ் இணைகிறார்.

தனுஷ் இரட்டை வேடமிட்டு நடிக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும் படத்தில் நடிகர் கருணாஸ் மகன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது நாம் அறிந்தவையே. படப்பிடிப்பு பணிகளை முடித்து போஸ்ட் ப்ரோடக்ஷனில் கவனம் செலுத்த உள்ளனர். படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி அசத்தி வருகிறது. படத்தின் ட்ரைலர் வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்றது.

தற்போது படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த டீ.ஜே கலாட்டா குழுவிற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். தனது வாழ்க்கைக்கு நடிகை ஆண்ட்ரியா தான் உறுதுணையாக உள்ளதாக கூறியுள்ளார். அவர் தான் வெற்றிமாறனிடம் அறிமுகப்படுத்தி இந்த வாய்ப்பை பெற்று தந்தாராம். லண்டனில் இருந்து கோவில்பட்டி வந்தவுடன் அந்த இடத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிகொண்டதாக கூறினார் டீ.ஜே. தனுஷ் சார் என்னை பாடகர் என்று கேட்டது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது என்றார். இயக்குனர் வெற்றிமாறனின் படப்பிடிப்பு தளம் ஓர் பள்ளி போன்றது என்று புகழ்ந்து கூறியுள்ளார்.