தமிழ் சினிமாவின் பல வெற்றி படைப்புகள் தந்த வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு அசுரன் என பெயரிடப்பட்டுள்ளது. கலைப்புலி S தாணு இப்படத்தை தயாரிக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களுக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் உடன் தனுஷ் இணைகிறார்.

தனுஷ் இரண்டு கெட்டப்பில் நடிக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும் படத்தில் நடிகர் கருணாஸ் மகன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது நாம் அறிந்தவையே. படப்பிடிப்பு பணிகளை முடித்து போஸ்ட் ப்ரோடக்ஷனில் கவனம் செலுத்த உள்ளனர். படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி அசத்தி வருகிறது.

படத்தின் ட்ரைலர் வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்றது. படத்தின் தீம் ட்ராக் விரைவில் வெளியாகும் என்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பதிவு செய்திருந்தார். தற்போது படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்ற தகவல் தெரியவந்தது.