தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் ஆர்யா தொடர்ந்து பல விதமான கதாபாத்திரங்களில் புது புது கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர். அந்த வகையில் கடைசியாக ஆர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக கடந்த ஆண்டில் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் டெடி, இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை, இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 3, இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் எனிமி என ஆர்யா நடிப்பில் வெளிவந்த இந்த நான்கு படங்களும் சூப்பர் ஹிட்டானது. இதனைத்தொடர்ந்து இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடிகர் ஆர்யா நடித்து வருகிறார்.

முன்னதாக டெடி படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் உடன் மீண்டும் இணைந்துள்ள ஆர்யா கேப்டன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடிக்கும் கேப்டன் திரைப்படத்தில், சிம்ரன், காவியா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கேப்டன் படத்திற்கு யுவா ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்ய டி.இமான் இசையமைக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு பூஜையுடன் கேப்டன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அறிவிக்கும் விதமாக கேப்டன் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்து இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன், ஆர்யா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சிம்ரன் மற்றும் குழுவினர் அனைவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

It’s a wrap for #Captain 💪 Thanks to our Captain @ShaktiRajan for another Exciting unique filming experience 😍😍U r one of a kind brother 🤗🤗 Cant wait for our next 😜💪💪👍 @SimranbaggaOffc Mam u r our lucky Mascot 😍@ThinkStudiosInd @immancomposer @AishuLekshmi pic.twitter.com/dLB99Peh13

— Arya (@arya_offl) February 12, 2022