சித்தார்த்,கேத்ரின் தெரசா நடிப்பில் உருவாகி வரும் படம் அருவம்.Horror காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் சாய் சேகர் இயக்கியுள்ளார்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.Trident ஆர்ட்ஸ் சார்பாக ரவீந்திரன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

சதிஷ்,காளி வெங்கட் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்