தமிழ் திரையுலகில் அதிரடி ஆக்ஷன் கதாநாயகனாக வலம் வரும் நடிகர் அருண் விஜய் முன்னதாக இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் நடித்துள்ள பார்டர் திரைப்படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில், மீண்டும் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் புதிய வெப்சீரிஸில் நடித்து வருகிறார்.

மேலும் அக்னிச்சிறகுகள், சீனம் மற்றும் பாக்ஸர் என அடுத்தடுத்து வரிசையாக அருண் விஜய் நடிப்பில் அதிரடியான திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. இதனிடையே நடிகர் அருண் விஜய் நடித்துள்ள யானை திரைப்படம் வருகிற ஜூன் 17-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

தமிழ் திரையுலக ரசிகர்கர்கள் விரும்பும் பல ஃபேவரட்டான கமர்சியல் படங்களை கொடுத்த முன்னணி இயக்குனர் ஹரி இயக்கத்தில் அதிரடியான ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராகியிருக்கும் யானை திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், சமுத்திரகனி, யோகிபாபு, அம்மு அபிராமி மற்றும் விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள யானை திரைபடத்திற்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சென்சாருக்கு தயாராகியுள்ள யானை திரைப்படத்தின் ட்ரைலர் வருகிற மே 30-ஆம் தேதி (நாளை) மாலை 6 மணிக்கு வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Electrifying #Yaanai 🐘 trailer to be out on May 30th @ 6 PM#YaanaiTrailer

Hitting the screens from June 17th.
#YaanaiFromJune17 @arunvijayno1 #DirectorHARI @DrumsticksProd @priya_Bshankar @realradikaa @iYogibabu @gvprakash @thondankani @Ammu_Abhirami @gopinath_dop @ertviji pic.twitter.com/NjTxBxMqiA

— ArunVijay (@arunvijayno1) May 28, 2022