நடிகர் அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்தது குறித்து இசையமைப்பாளர் டி.இமான் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக தொடர்ச்சியாக பல்வேறு விதமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகர் அருள்நிதி நடிப்பில் அடுத்து வெளிவர தயாராகி வரும் திரைப்படம் டிமான்டி காலனி 2. தனது திரைப் பயணத்தின் மிக முக்கிய படமாக அமைந்த டிமான்டி காலனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி இணைந்து நடித்திருக்கும் டிமான்டி காலனி 2 திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அருள்நிதி நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ஜோதிகாவின் ராட்சசி படத்தை இயக்கிய இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் நடக்கும் தரமான சமூக அக்கறை கொண்ட படமாக வந்த கழுவேத்தி மூர்க்கன் படத்தில் மிரட்டலான புதிய லுக்கில் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். சார்பட்டா பரம்பரை & நட்சத்திரம் நகர்கிறது படங்களின் நாயகி துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ள கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனீஸ்காந்த், ராஜசிம்மன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீதர் ஒளிப்பதிவில், நாகூரான் படத்தொகுப்பு செய்துள்ள கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்திற்கு D.இமான் இசையமைக்க, பாடல்களை கவிஞர் யுகபாரதி எழுதியுள்ளார். தயாரிப்பாளர் S.அம்பேத்குமார் தனது ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரித்துள்ள அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட கடந்த மே 26 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.தொடர்ச்சியாக மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்ற கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில் தற்போது 50 நாட்களை திரையரங்குகளில் வெற்றிகரமாக கடந்திருக்கும் கழுவேத்தி மூர்க்கன் படம் குறித்து இயக்குனர் சை.கொளதமராஜ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்,

ஒரு திரைப்படம் என்பது சமூகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும், ஏதோ ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும், 50 நாட்களாக கழுவேத்தி மூர்க்கன் எழுதப்பட்டும் பேசப்பட்டும் கொண்டிருக்கிறான், நாம அடிவாங்குறவங்க பக்கம்தான் நிக்கணும், அவங்கள அடி வாங்காம பார்த்துக்கணும்.. #கழுவேத்திமூர்க்கன்.

என பதிவிட்டுள்ளார். அதேபோல் இசை அமைப்பாளர் டி இமான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்,

50 நாட்களாக தொடர்ந்து சமூக ஊடகங்களில் ""கழுவேத்தி மூர்க்கனை'" பற்றி எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். தலைவர்களும் திரை ஆளுமைகளும் முற்போக்காளர்களும் பல மேடைகளில் படத்தினை பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார்கள். படம் சார்ந்த கூட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. பத்துக்கும் மேலான காட்சிகள் தனியாக சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. ஒரு நல்ல திரைப்படம் என்பது சமூகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும், ஏதோ ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும், படம் பேசும் தளத்திலான சூழல்கள் உருவாகும் போது படம் மீண்டும் திரும்பிப் பார்க்கப்பட வேண்டும். அதுவே வெற்றி. 50 நாட்களாக கழுவேத்தி மூர்க்கன் அவ்வேலையை செய்தபடி பயணித்துக் கொண்டே இருக்கிறான், ""நம்ம அடிவாங்குறவங்க பக்கம்தான் நிக்கணும், அவங்கள அடி வாங்காம பார்த்துக்கணும்.. #கழுவேத்திமூர்க்கன். தோள் கொடுத்தவர்களுக்கு கை குலுக்கி நன்றிகளும் பூங்கொத்துக்களும்.. தொடர்கிறது பயணம்.

என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு இதோ…

ஒரு திரைப்படம் என்பது சமூகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும், ஏதோ ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும், 50 நாட்களாக கழுவேத்தி மூர்க்கன் எழுதப்பட்டும் பேசப்பட்டும் கொண்டிருக்கிறான், நாம அடிவாங்குறவங்க பக்கம்தான் நிக்கணும், அவங்கள அடி வாங்காம பார்த்துக்கணும்.. #கழுவேத்திமூர்க்கன். pic.twitter.com/8rzLcFeuVH

— Sy.Gowthamraj (@sy_gowthamraj) July 14, 2023