இந்த 2023 ஆம் ஆண்டில் இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக நாளுக்கு நாள் பெரும் ஹைப்பை கிளப்பிய தளபதி விஜயின் லியோ திரைப்படம் அடுத்த சில தினங்களில் வெளிவருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் மீண்டும் இணைந்த தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி ஆகிய படங்களில் இணைந்து நடித்த ரசிகர்களின் ஃபேவரட் PAIR-ஆன தளபதி விஜய் - திரிஷா ஜோடி 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது லியோ திரைப்படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறது. மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்திய சினிமாவில் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான மனோஜ் பரமஹம்சா அவர்களின் அட்டகாசமான ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கும் லியோ திரைப்படத்திற்கு சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்ற தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். அன்பறிவு மாஸ்டர்களின் அதிரடியான ஆக்ஷனில் உருவாகி இருக்கும் இந்த லியோ திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார். ஆயுத பூஜை விடுமுறையை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் உலகம் முழுவதும் மிகப் பெரிய அளவில் பிரம்மாண்டமாக வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. தளபதி விஜயின் திரை பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிரட்டலான அதிரடி ஆக்சன் நிறைந்த திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த லியோ திரைப்படத்தில் CG உதவியோடு செய்யப்பட்டிருக்கும் கழுதைப்புலி ஆக்சன் காட்சி தியேட்டரில் பக்கா விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த நிலையில் லியோ திரைப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றி இருக்கும் சதீஷ்குமார் அவர்கள் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில் லியோ திரைப்படம் குறித்து பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பேசும் போது, "இந்த லியோ படத்தில் கழுதைப்புலியின் காட்சி பெரிய ஹைப்பை கிளப்பி இருக்கிறது. அதனுடைய OUT பார்க்கும் போது உங்களுக்கு எப்படி இருக்கிறது?" எனக் கேட்டபோது, “அதை சொல்லும்போதே எப்படி சொன்னார்கள் என்றால் இந்த மாதிரி ஒன்றை பயன்படுத்த போகிறோம்... CG என்றாலே எங்களுக்கெல்லாம் கொஞ்சம் பயம் அது எப்படி வருமோ..? அது சரியாக வராது… சரியாக செய்ய மாட்டார்கள் என்று பயம். ஆனால் அதற்காகவே இயக்குனர் போய் அந்த ஒரு சீக்குவன்ஸை படமாக்கிவிட்டு அவர்களுக்கு எவ்வளவு நேரம் தேவைப்படுமோ அந்த நேரத்தை கொடுத்து விட்டார். இப்போது OUT பார்க்கும்போது பயங்கர ஆச்சரியமாக இருக்கிறது நான் பார்த்துவிட்டு ஒரிஜினலாக இருக்கிறது இயக்குனரே என்று சொன்னேன். ஆமாங்க CG என இயக்குனர் சொன்னார்.” என்று தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட கலை இயக்குனர் சதீஷ்குமாரின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.