ஒட்டு மொத்த இந்திய சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்றாக வருகிற அக்டோபர் 19ஆம் தேதி தளபதி விஜயின் லியோ திரைப்படம் உலகம் எங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் பக்கா அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக வெளிவர இருக்கும் லியோ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து இன்னும் பெரிய எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கிறது. இந்த நிலையில் லியோ திரைப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றி இருக்கும் சதீஷ்குமார் அவர்கள் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில் லியோ திரைப்படம் குறித்து பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பேசும் போது

"கலைப் பணியில் மூலமாக இந்த படம் LCUவில் சேருமா சேராதா என ஏதாவது சில விஷயங்கள் இதில் வைப்பதற்கான இடம் இந்த படத்தில் இருந்ததா?" என கேட்டபோது, “அந்த மாதிரி எந்த படத்திற்குமே கிடையாது ஏனென்றால் இங்கு அதை காட்டிவிட்டால் அங்கு அதை காட்டுவோமா என்கிற மாதிரியெல்லாம் இல்லை. LCUவில் இருக்கிறதா இல்லையா என்கிற தலைப்புக்குள்ளேயே நாங்கள் போகவே இல்லை. பொதுவாகவே அதை பற்றி நாங்களே கேட்டுக் கொள்வதில்லை. என்னவாக விஷயங்கள் முதலில் கதையாக பேசுகிறோமோ இந்த கதை என்னவாக இருக்கப் போகிறது என்று பேசினோமோ அது தான். அது LCU-வில் இருக்குமா இருக்காதா இருந்தால் இதையெல்லாம் வைக்க வேண்டுமா என்றால் தெரியவில்லை. அதை தொடர்புப்படுத்துவது போல வைக்கிறோமா என்று கேட்டால் இல்லை. அப்படி எதுவும் இந்த படத்தில் செய்த மாதிரி ஞாபகம் இல்லை” என்று பதில் அளித்தார்.

தொடர்ந்து அவரிடம் “நிறைய கார்கள் இருந்தது?” என கேட்டபோது, “கைதியில் அப்படி இருந்ததா? மாஸ்டரில் கூட அப்படி இருந்திருக்குமா? நெய்வேலியில் எடுக்கப்பட்ட காட்சிகள் எல்லாம் அப்படியே இருந்திருக்குமா? இல்லை மாநகரத்தில் அப்படி இருந்திருக்குமா? கார்கள் இல்லாமல் இரவில் எப்படி படம் பண்ண முடியும். அந்த காட்சியில் வெளிச்சம் வேண்டுமென்றால் அதற்கான சோர்ஸ் எது இருக்கும். வேறு என்ன செய்வது கார் என்பது பொதுவாகவே எல்லாவற்றிலும் இருப்பது தான். கார் அனைத்தையும் வரிசையாக நிறுத்தி வைத்து லைட் போடுவது என்பது பயங்கர இருட்டில் வேலை பார்க்கும் போது அதுதான். முக்கியமாக ஒரு வில்லனிசம் காட்டுவதற்கு இரவில் இவர்களெல்லாம் கிளம்புகிறார்கள் என காட்டுவதற்கு அப்படி செய்திருப்போம். விக்ரம் திரைப்படத்தில் அப்படி சுற்றி ரவுண்டப் பண்ணி நின்றிருப்பார்கள். இதில் ஃபேக்டரியிலிருந்து கிளம்புவதை தானே சொல்கிறீர்கள்? அது அவருடையது (லோகேஷ் கனகராஜ்) தான். மாஸ்டர் படத்திலும் மாநகரம் படத்திலிருந்து கூட அப்படி பண்ணி இருப்போம். அதன் லைட்டுகளையும் பயன்படுத்துவதற்கான காரணம் கேமரா மேன்கள் லைட்டை பயன்படுத்த முடியாது. நீங்கள் எதையாவது காட்ட வேண்டும் என்றால் அதற்கு ஒரு லைட் வேண்டும் அல்லவா அதற்காக கார்களின் லைட்டுகளை பயன்படுத்து அவ்வளவுதான்” என பதில் அளித்து இருக்கிறார். இன்னும் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்ட கலை இயக்குனர் சதீஷ்குமார் அவர்களின் அந்த முழு பேட்டையை கீழே உள்ள லிங்கில் காணலாம்.