தமிழ் சினிமாவில் மிரட்டலான வில்லனாக அறிமுகமாகி இன்று தென்னிந்திய ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகனாக வலம் வரும் நடிகர் அர்ஜுன் தாஸ். கடந்த 2019ல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமான அர்ஜுன் தாஸ், அசாரதரமான நடிப்பையும் அவருக்கே உரித்தான தனித்துவமான குரலாலும் ரசிகர்களை மிரள வைத்தார். இப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே தனி கவனம் பெற தொடங்கி பட வாய்புகள் இவருக்கு குவிய தொடங்கியது. அதை தொடர்ந்து 2020ல் வெளியான ‘அந்தாகாரம்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உடன் ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ ஆகிய படங்களில் நடித்தார். வில்லனாகவும் நடிகராகவும் கவனம் ஈர்த்து வரும் அர்ஜுன் தாஸ் தமிழில் மட்டுமல்லாமல் தற்போது தெலுங்கு திரையுலகிலும் பல படங்களில் நடித்து வருகிறார். அதன்படி தற்போது அர்ஜுன் தாஸ் பவன் கல்யான் நடித்து வரும் ‘ஒஜி’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘அநீதி’. பிரபல இயக்குனர் வசந்த பாலன் தயாரிப்பில் உருவான இப்படம் சமீப காலமாக ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது, அதன்படி அநீதி திரைப்படம் வரும் ஜூன் 21 ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் நடிகை துஷாரா விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு வெளியாகவிருக்கும் ‘அநீதி’ திரைப்படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இதில் நடிகர் அர்ஜுன் தான் தன் திரைப்பயணம் குறித்து பேசுகையில், எல்லா பெருமையும் லேகேஷ்க்கு தான் போய் சேரும். கைதியில் நான் பண்ண கதாபாத்திரத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதன்பின் மாஸ்டர் வாய்ப்பு.. அது பெரிய படம். விஜய் சார் படம் என்பதால் எல்லோரும் என்னை பார்ப்பாங்க.. அதன்பின் விக்ரம்... அதனால் எனக்கு வர புகழ் எல்லாம் லோகேஷ் கனகராஜ் சாருக்கு தான் போய் சேரும்.. என்றார்.

மேலும் தொடர்ந்து லியோ படம் குறித்த பேசுகையில், லியோ படம் குறித்து ரசிகர்கள் கேட்பதை நான் நல்ல விஷயமாதான் பார்க்குறேன்.‌ அவங்களுக்கு அந்த படம் குறித்து ஆவல் இருக்கிறது. படம் குறித்து ரசிகர்கள் கேட்பது ஒரு அன்பின் பிரதிபலிப்பாக தான் பார்க்கிறேன். அதுக்குதான் LCU வா னு கேட்குறாங்க.. என்று குறிப்பிட்டார் நடிகர் அர்ஜுன் தாஸ். அதை தொடர்ந்து உங்களுத்கு LCU கதை தெரியுமா என்று கேட்க, கதை பேசும் போது நானும் அங்க இருந்தேன். யார் யார் என்ன கதாபாத்திரம்னு எல்லாம் தெரியும். என்றார். அதை தொடர்ந்து படம் உருவாகி வருவதை பார்த்தால் அக்டோபர் மாதம் லியோ வேற மாதிரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

மேலும் நடிகர் அர்ஜுன் தாஸ் அவர்கள் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ உள்ளே..