செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி காலப் போக்கில் தீவிரமாக வளர்ந்து வருகின்றது. அத்தகையை தொழில்நுட்ப வளர்ச்சியினை மக்களும் வரவேற்று வருகின்றனர். அறிவியல் சார்ந்த வளர்ச்சி கால போக்கில் வளரும் வேகத்தில் இந்த செயற்கை நுண்ணறிவு என்றழைக்கப்படும் AI ன் வளர்ச்சியும் வளர்ந்து வருகிறது. சமீபத்தில் கூட சாட் ஜிபிடி எனும் Ai செயல்பாடு மக்களிடம் அதிக பயன்பாட்டில் இருந்து வருகின்றது. ஆரம்பத்தில் இருந்தே இந்த செயற்கை நுண்ணறிவு செயல்பாடு மனித வளர்ச்சிக்கு மிகப்பெரிய பக்க பலமாய் இருக்கும் என்ற கருத்துடன் இது மிகப்பெரிய ஆபத்தாகவும் இருக்கும் என்ற விமர்சனமும் இருந்து வருகிறது.

இந்நிலையில் சீனாவில் உள்ள பள்ளியில் மாணவர்களின் கவனிப்பு திறனை கையாள செயற்கை நுண்ணறிவு கருவி வைத்து கண்காணிக்கப்படுகிறது. மேலும் ரோபோ வும் அந்த வகுப்பில் கண்காணிப்பாளராக செயல்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் இந்தியாவின் பெருமை மிகு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் அந்த வீடியோவினை பகிர்ந்து

"இந்த கால இளம் தலைமுறையினரை நினைத்து கவலை கொள்கிறேன்.. அவர்கள் ஒரே நேரத்தில் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்களா அல்லது சபிக்கப்பட்டவர்களாக இருப்பார்களா என்பதை காலம் தான் பதில் தரும்” என்று கருத்தினை பதிவிட்டுள்ளார்.

இந்த கருத்தினை பகிர்ந்து இசையமைப்பாளர் தமன் “இது முற்றிலும் உண்மை சார்” என்று கூறியுள்ளார். இதையடுத்து ஏஆர் ரஹ்மான் பதிவு இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Absolutely true ❤️ Sir @arrahmanhttps://t.co/O1Uq2KDKuB

— thaman S (@MusicThaman) May 6, 2023

சமீபத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் பொன்னியின் செல்வன் 2 பாடல்கள் மற்றும் பத்து தல திரைப்பட பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து தற்போது ஏ ஆர் ரஹ்மான் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமன்னன் படத்திலும் இந்தியில் மைதான் படத்திலும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.