தமிழ்நாட்டின் மிக முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும் சத்தியபாமா நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 32-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தேசிய தொழில்நுட்ப கல்லூரி குழுமத்தின் தலைவர் மதிப்புக்குரிய சீதாராம் அவர்கள் நீட் தேர்வு குறித்தும் பேசியிருக்கிறார். சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரி பகுதியில் அமைந்திருக்கும் சத்தியபாமா நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் 32-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் 3504 இளநிலை பட்டதாரிகளுக்கும், 551 முதுநிலை பட்டதாரிகளுக்கும், 104 மாணவர்களுக்கு முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது.

இந்த பட்டமளிப்பு விழாவில் சத்தியபாமா நிதர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் மேரி ஜான்சன் ஆகியோர் கலந்து கொள்ள அவர்களது முன்னிலையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய தொழில் நுட்ப கல்லூரி குழுமத்தின் தலைவர் மதிப்பிற்குரிய சீதாராம் அவர்கள், 3504 இளநிலை பட்டதாரிகளுக்கும், 551 முதுநிலை பட்டதாரிகளுக்கும், 104 மாணவர்களுக்கு முனைவர் பட்டங்கள் உட்பட, மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மேலும் பல்வேறு துறை படிப்புகளில் முதலிடம் பிடித்த மாணவ மாணவியர் 47 பேருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இதில் டிப்ளமோ மருந்தகத் துறையில் பயின்ற 9 மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய இந்திய தொழில்நுட்ப கல்லூரி குழுமத்தின் தலைவர் சீதாராம் அவர்கள், “மாணவர்கள் தொடர்ந்து தங்கள் இலக்கை நோக்கி பயணிக்கவும் உங்கள் பாதையை நீங்களே தேர்ந்தெடுக்க வேண்டும்” என்றும் “ஒவ்வொரு மனிதனின் எதிர்காலத்திற்கு கல்வி அவசியம்” என்றும் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தேசிய தொழில்நுட்ப கல்லூரி இந்தியா முழுக்க தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து, “தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வித்தரத்தை உயர்த்த பல்கலைக்கழகங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று அறிவுறுத்தினார். மேலும் “மருத்துவம் படிப்பதற்கு நீட் தேர்வை போன்ற அவசியம் தற்போது வரை தொழில்நுட்ப துறைகளில் படிப்பதற்கு தேசிய தொழில்நுட்ப கல்வி குழுமத்தின் சார்பாக எந்தவித தேர்வு திட்டமும் இல்லை” என பேட்டியளித்தார். இந்த பட்டமளிப்பு விழாவின் புகைப்படங்கள் இதோ…