இந்திய திரை உலகின் பிரபல கதாநாயகிகளில் ஒருவரும் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையுமான ஆலியா பட், கரண் ஜோகர் இயக்கத்தில் வெளிவந்த ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், கபூர் அண்ட் சன்ஸ், ஜீரோ, கல்லி பாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

முன்னதாக முன்னணி பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த கங்குபாய் திரைப்படத்தில் கதாநாயகியாக அசத்தலாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ஆலியா பட் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வருகிற மார்ச் 25ஆம் தேதி உலகெங்கும் பல மொழிகளில் ரிலீசாக உள்ள RRR திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் ஆலியா பட் நடிப்பில் அடுத்தடுத்து பிரம்மாஸ்திரா, டார்லிங்க்ஸ், ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி உள்ளிட்ட பாலிவுட் திரைப்படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் தற்போது நடிகை ஆலியா பட் ஹாலிவுட்டில் களமிறங்குகிறார்.ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான வொண்டர் வுமன் கதாபாத்திரத்தில் நடித்த கேல் கெடாட் கதாநாயகியாக நடிக்கும் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் படத்தில் மற்றொரு கதாநாயகியாக ஆலியா பட் நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.

ஸ்பை திரில்லர் படமாக உருவாகும் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் படத்தை டாம் ஹார்பர் இயக்குகிறார். பிரபலமான PEAKY BLINDERS வெப் சீரிஸ் உட்பட பல திரைப்படங்களையும் வெப்சீரிஸ்களையும் இயக்கியுள்ள இயக்குனர் டாம் ஹார்பர் இயக்கும் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் திரைப்படம் விரைவில் நேரடியாக நெட்ஃபிலிக்ஸில் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exciting News: Alia Bhatt will star alongside Gal Gadot and Jamie Dornan in their new movie Heart of Stone! pic.twitter.com/n9sp5YEJZS

— Netflix (@netflix) March 8, 2022