தமிழ் திரை உலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக அமைந்தது சூரரைப்போற்று திரைப்படம். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் சூரரைப்போற்று திரைப்படம் பல மொழிகளிலும் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோ வெளிவந்து அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் சூரரைப்போற்று திரைப்படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆகவுள்ளது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து ஏர்லிஃப்ட் & ஷெர்ரி உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான அபுடன்ட்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் தயாரிக்கவுள்ளது.

சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் படத்திற்கும் ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். முன்னதாக மாறா (எ) நெடுமாறன் ராஜாங்கம் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய நிலையில் பாலிவுட் திரை உலகில் இருந்து இந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வந்தது.

இந்நிலையில் சூரரைப்போற்று திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான அக்ஷய்குமார் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கதாநாயகியாக ராதிகா மதன் நடிக்கிறார். மேலும் சூரரை போற்று ஹிந்தி ரீமேக் படத்தின் படப்பிடிப்பு இன்று (ஏப்ரல் 25) தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

A new begining… need all your love and blessings!! @akshaykumar @Sudha_Kongara @gvprakash @CaptGopinath @CapeOfGoodFilm @Abundantia_Ent @2D_ENTPVTLTD pic.twitter.com/R69zacDR70

— Suriya Sivakumar (@Suriya_offl) April 25, 2022

A post shared by Akshay Kumar (@akshaykumar)