தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்ட தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் விரும்பும் ஹீரோவாக தொடர்ந்து கணக்கான திரைப்படங்களை கொடுத்து வரும் அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் துணிவு. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி பெறும் வகையில் மீண்டும் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக ரிலீஸாகி ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.இதனை அடுத்து அஜித் குமாரின் திரைப்பயணத்தில் 62வது திரைப்படமாக தயாராகும், AK62 திரைப்படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

AK62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. நடிகர் அஜித்குமார் உடன் முதல் முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இணையும் AK62 திரைப்படத்திற்கு வேதாளம் மற்றும் விவேகம் ஆக்கிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்து அனிருத் இசை அமைக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே சமீபத்தில் AK62 திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியிருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், அவருக்கு பதிலாக அதிரடி ஆக்சன் திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி வரும் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. பைக் ரைடிங்கிலும் மிகுந்த ஆர்வத்தோடு தனது சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வரும் அஜித்குமார் அடுத்ததாக உலக சுற்றுப்பயணம் ஒன்றை தொடங்க இருக்கிறார். இந்த பைக் உலக சுற்றுப் பயணத்திற்கு “பரஸ்பர மரியாதை பயணம்” எனவும் பெயரிட்டுள்ளார்.

முன்னதாக அஜித்குமாரும் ஷாலினியும் இன்று ஏப்ரல் 25ஆம் தேதி தங்களது திருமண நாளை கொண்டாடுகின்றனர். கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகர் அஜித்குமார், நடிகை ஷாலினியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா,ஆத்விக் என்ற ஒரு மகளும் மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது தங்களது 23 வது திருமண நாளை கொண்டாடுகின்றனர். அஜித் குமார் மற்றும் ஷாலினியின் திருமண நாளுக்கு கலாட்டா குழுமம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அதேபோல் ரசிகர்களும் முன்னணி பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித் குமார் இணைந்திருக்கும் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “23 ஆண்டுகள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…