தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திர நடிகராக, பல கோடி ரசிகர்களின் அபிமான ஃபேவரட் ஹீரோவாக திகழும் அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் வலிமை. சதுரங்கவேட்டை, தீரன் மற்றும் நேர்கொண்டபார்வை படங்களை இயக்கிய இயக்குனர் H.வினோத் வலிமை படத்தை இயக்கியுள்ளார்.

முன்னணி தயாரிப்பாளர் போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள வலிமை திரைப்படத்தில் அஜித்குமார் உடன் இணைந்து ஹூமா குரேஷி, யோகி பாபு, விஜய் டிவி புகழ் ஆகியோர் நடிக்க, மிரட்டலான வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளார்.

வலிமை படத்திற்கு முன்னணி ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள வலிமை படத்தில் திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். முன்னதாக வெளியான வலிமை மோஷன் போஸ்டர் ,Glimpse மற்றும் வலிமை மேக்கிங் வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த ஆண்டு (2022) பொங்கல் விருந்தாக வருகிற ஜனவரியில் ரிலீஸாகவுள்ள வலிமை திரைப்படத்தை கோபுரம் சினிமாஸ் வெளியிடுகிறது. இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை யுனிட்டெட் இந்தியா எக்ஸ்போர்டர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Thrilled to announce that we have acquired The Entire Overseas Theatrical Rights for #AjithKumar’s most awaited #Valimai 💥🔥#AjithKumar #HVinoth @BoneyKapoor @BayViewProjOffl @thisisysr @ZeeStudios_ @SureshChandraa @SonyMusicSouth #ValimaiPongal @ThalaFansClub @suaibmeeran__ pic.twitter.com/JFGBRjCguB

— United India Exporters (@uie_offl) December 17, 2021