தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் அஜித் இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிப்பு மட்டுமின்றி கேமரா, சமையல், கார், பைக் ரேஸ் போன்றவற்றில் அதிகம் ஆர்வமுடையவர்.இவர் நடிப்பில் தயாராகியுள்ள வலிமை படம் 2022 பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.இந்த படத்தினை சதுரங்க வேட்டை,தீரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய எச் வினோத் இயக்கியுள்ளார்.இதற்கு முன் இதே கூட்டணியின் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.ஹுமா குரேஷி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துளளார்.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.பெரிய எதிர்பார்ப்புக்கிடையே பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது.

பல இடங்களில் சிறப்பு காட்சிகள் திரையிட திட்டமிடப்பட்டு வருகிறது.நாளை படம் ரிலீசாக உள்ள நிலையில் புதிய ஆக்ஷன் டீஸர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த டீஸர் படத்தின் மீதான எதிர்பார்ப்பினை ரசிகர்களிடம் ஏற்றியுள்ளது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

Power will unleash tomorrow with #Valimai!
Releasing in Tamil, Telugu, Kannada and Hindi on 24th February 2022#ValimaiPromo #ValimaiThePower #ValimaiFDFS #ValimaiFromFeb24 #ValimaiFromTomorrow #AjithKumar @BoneyKapoor #HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_ pic.twitter.com/mrQeHyRVhH

— BayViewProjectsLLP (@BayViewProjOffl) February 23, 2022