தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வலிமை. இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக அஜித் நடித்த, ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

முன்னதாக அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நேர்கொண்டபார்வை மற்றும் வலிமை படங்களை தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூர், அஜித்குமார் நடிக்கும் அடுத்த #AK61 படத்தையும் தயாரிக்கிறார். இந்தத் திரைப்படத்தையும் இயக்குனர் H.வினோத் இயக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில் அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக #AK62 திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியானது. முதல் முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் #AK62 திரைப்படத்தில் அஜித் குமார் நடிக்கிறார். வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயத்தில் நடிகர் அஜித்குமார் தற்போது சுவாமி தரிசனம் செய்துள்ளார். கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் அஜித்குமாரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ…

Latest pictures of #AjithKumar offering his prayer!

Before commencing #AK61 shoot, the star visited a temple in Kerala and seeked the blessings of the almighty! ❤#Ajith #AK pic.twitter.com/OKHVoiPr9C

— Galatta Media (@galattadotcom) March 31, 2022