தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா நடிகர்களில் ஒருவர் அஜித்.தமிழ் சினிமாவின் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவராக அஜித் இருக்கிறார்.இவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தினை எச் வினோத் இயக்கியுள்ளார்.போனி கபூர் இந்த படத்தினை தயாரித்துள்ளார்.பெரிய எதிர்பார்ப்புக்கிடையே இந்த படம் வெளியாகவுள்ளது.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இவர் அடுத்து என்ன படத்தில் நடிக்கப்போகிறார் என ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த படத்தையும் எச் வினோத் இயக்குகிறார் போனி கபூர் இந்த படத்தினை தயாரிக்கிறார் என்ற தகவல் பரவி வந்தது.தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார்.

அஜித்தின் ஒரு புது லுக்குடன் கூடிய ஒரு போஸ்டருடன் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.AK 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை வினோத் தான் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.2022 தீபாவளிக்கு படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.படத்தில் வேலை பார்க்கும் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Prep mode on #AK61 pic.twitter.com/UOqGUrZwgK

— Boney Kapoor (@BoneyKapoor) February 15, 2022