தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் அஜித் இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் கடைசியாக வலிமை படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தினை போனி கபூர் தயாரித்திருந்தார்,எச் வினோத் இந்த படத்தினை இயக்கியிருந்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் AK 61 படத்தில் நடிக்கவுள்ளார்.இதனை அடுத்து முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் AK 62 படத்தில் நடிக்கவுள்ளார்.விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

AK 61 படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கி ஹைதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.வினோத் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த படத்தில் ராஜதந்திரம் வீரா உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.மஞ்சு வாரியார் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் அஜித்தின் வெளிநாட்டு ட்ரிப்பிற்கு பிறகு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் ஒரு முக்கிய மெசேஜ் ஒன்றை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார் அஜித்.நம்மை சுற்றி வரும் தேவையற்ற சத்தங்களை தவிர்த்தால் செவிகளுக்கு நல்லது என அவர் தெரிவித்துள்ளார்.இந்த ட்வீட்டை கீழே உள்ள லிங்கில் காணலாம்

“Protect your ears”
Unconditional love always - Ajith pic.twitter.com/qd543owHDt

— Suresh Chandra (@SureshChandraa) August 20, 2022