தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் அஜித்குமார் கடைசியாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2வது முறையாக மீண்டும் அஜீத் குமாருடன் இயக்குனர் H.வினோத் இணைந்த திரைப்படம் வலிமை.

வலிமை திரைப்படத்தில் அஜீத் குமாருடன் இணைந்து ஹுமா குரேஷி, சுமித்ரா, யோகிபாபு, செல்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க மிரட்டலான வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திக்கேயா நடித்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள வலிமை திரைப்படம் வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

தயாரிப்பாளர் போனி கபூரின் பே பியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் வலிமை திரைப்படம் ரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது . அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக தயாராகியிருக்கும் வலிமை திரைப்படத்தில் திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

காவல்துறை அதிகாரியாக அஜித் குமார் மிரட்டியிருக்கும் வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது வலிமை திரைப்படத்திலிருந்து எமோஷனலான புதிய ப்ரோமோ வீடியோ வெளியானது அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கை காணலாம்.

Emotions drive power and just in 4 days experience it with #Valimai! Releasing in Hindi, Tamil, Telugu, and Kannada on 24th Feb 2022.#Valimai4DaysToGo #ValimaiPromo #ValimaiThePower #ValimaiFDFS #ValimaiFromFeb24#AjithKumar #HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_ pic.twitter.com/YE5Zy3QVVa

— Boney Kapoor (@BoneyKapoor) February 20, 2022