பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகனாகவும் தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரமாகவும் ஜொலிக்கும் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த வலிமை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் அஜித் நடித்த அதிரடி ஆக்ஷன் படமாக வெளிவந்த வலிமை பட ஸ்டண்ட் காட்சிகள் அனைத்தும் பாராட்டப்பட்டது.

இதனையடுத்து மீண்டும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் #AK61 திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். போனி கபூர்-அஜித் குமார்-H.வினோத்-நீரவ்ஷா கூட்டணியில் உருவாகும் 3-வது திரைப்படமான #AK61 திரைப்படத்தில் நடிகை மஞ்சுவாரியர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தொடங்கப்பட்ட #AK61 திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அடுத்ததாக முதல்முறை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் #AK62 திரைப்படத்தில் அஜித்குமார் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் #AK62 திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக முழுக்க முழுக்க வெண் நிற தலை முடி மற்றும் தாடியுடன் #AK61 படத்திற்கான அசத்தலான புதிய கெட்டப்பில் அஜித் குமார் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்து பலரது கவனத்தையும் ஈர்த்து வரும் நிலையில், தற்போது அஜித்குமார் தனது ரசிகரோடு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ…

Our Man #AK #AjithKumar 👑🔥😍#AK61 pic.twitter.com/WuFHnQplCp

— AK FANS COMMUNITY™ (@TFC_mass) May 31, 2022