தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் அஜித் இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் கடைசியாக வலிமை படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தினை போனி கபூர் தயாரித்திருந்தார்,எச் வினோத் இந்த படத்தினை இயக்கியிருந்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் AK 61 படத்தில் நடிக்கவுள்ளார்.இதனை அடுத்து முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் AK 62 படத்தில் நடிக்கவுள்ளார்.விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

AK 61 படத்தின் ஷூட்டிங் சில கட்டங்களாக நடைபெற்று வருகிறது.இந்த ஷூட்டிங்கிற்கு இடையே அஜித் ஒரு வெளிநாட்டு ட்ரிப் சென்று வந்தார்.நடிப்பு மட்டுமின்றி கேமரா, சமையல், கார், பைக் ரேஸ்,துப்பாக்கி சுடுதல் என பல துறைகளில் ஆர்வம் மிகுந்தவராக அஜித் திகழ்ந்து வருகிறார்.

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் சில தினங்களுக்கு முன் கலந்துகொண்டார் அஜித்குமார்.அவரை பார்க்க ஏராளமான ரசிகர் கூட்டம் கூடியது இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி செம வைரலாகி வந்தன.

தற்போது இந்த 47ஆவது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் மற்றும் அவரது அணியினர் இணைந்து 4 தங்கம் மற்றும் 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.இதுகுறித்த புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் 6 பதக்கங்களை வென்றது அஜித்குமாரின் அணி. #Ajithkumar #AK #Ajith #Ajith #Riffle #TrichyRifleClub pic.twitter.com/c7yTiLX5H7

— Galatta Media (@galattadotcom) July 30, 2022