தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு பூரண குணமடைந்து மீண்டும் வந்தார்.

முன்னதாக நடிகர் தனுஷ் & ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த 3 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடர்ந்து கௌதம் கார்த்திக், டாப்சி, ப்ரியா ஆனந்த் & விவேக் ஆகியோர் இணைந்து நடித்த வை ராஜா வை படத்தை இயக்கினார். கடைசியாக ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் சினிமா வீரன் எனும் டாக்குமென்டரி திரைப்படமும் வெளியானது.

இதனிடையே திரையுலகில் ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக தன் பணியை தொடங்கியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முஸாஃபிர் எனும் ஆல்பம் பாடலை இயக்கி வருகிறார். அன்கித் திவாரி இசையில் உருவாகியிருக்கும் முஸாஃபிர் பாடலை தமிழில் இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். மேலும் மலையாளத்தில் பாடகர் ரஞ்சித்தும் தெலுங்கில் பாடகர் சாகரும் பாடியுள்ளனர்.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் பாடலை பே ஃபிலிம்ஸ் LLP நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகர் ஷிவின் நரங் நடித்துள்ள முஸாஃபிர் மியூசிக் வீடியோவிற்கு விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய முன்னணி நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

நேற்று (பிப்ரவரி 21-ம் தேதி) முஸாஃபிர் பாடலின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பணியாற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ...

A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryaa_r_dhanush)