தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் சிறந்த நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சுழல் எனும் புதிய வெப்சீரிஸில் நடித்துள்ளார். கிரைம் திரில்லர் வெப் சீரியஸாக விரைவில் அமேசான் ப்ரைம் வீடியோவில் சுழல் வெப் சீரிஸ் ரிலீசாகவுள்ளது. தொடர்ந்து தற்போது மலையாளத்தில் புலிமடா எனும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக தி கிரேட் இந்தியன் கிச்சன் மலையாள படத்தின் தமிழ் ரீமேக் படம், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ள துருவநட்சத்திரம், விஷ்ணு விஷால் உடன் இணைந்து மோகன்தாஸ், ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் இணைந்து தீயவர் கொலைகள் நடுங்க உள்ளிட்ட படங்களில் முன்ன்ணி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார்.

இந்த வரிசையில் அடுத்ததாக வத்திக்குச்சி படத்தின் இயக்குனர் கின்ஸ்லின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் திரைப்படம் டிரைவர் ஜமுனா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் வெளிவரவுள்ள டிரைவர் ஜமுனா திரைப்படத்தை 18 ரீல்ஸ்ஸ் சார்பில் S.P.சௌத்ரி தயாரித்துள்ளார்.

கோகுல் பெண்டி ஒளிப்பதிவில் ராமர் படத்தொகுப்பு செய்திருக்கும் டிரைவர் ஜமுனா படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் டிரைவர் ஜமுனா படத்திற்கு அனல் அரசு ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் டிரைவர் ஜமுனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அசத்தலான அந்த ஃபர்ஸ்ட் லுக் இதோ…

Happy to share the first looks of @aishu_dil's #DriverJamuna, Congrats team 🚖#DriverJamunaFirstLook @kinslin @SPChowdhary3 @18Reels_ @GhibranOfficial @gokulbenoy #AnlArasu @thinkmusicindia #RRamar @reddotdzign1 @Synccinema @knackstudios_ @proyuvraaj pic.twitter.com/5uFqpFTVRd

— VijaySethupathi (@VijaySethuOffl) May 5, 2022