விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்து வரும் படம் அக்னிச் சிறகுகள். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை மூடர் கூடம் புகழ் நவீன் இயக்கி வருகிறார். ஷாலினி பாண்டே, ரைமா சென், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர்.

சமீபத்தில் படக்குழுவினர் படப்பிடிப்புக்காக வெளிநாடு பயணம் மேற்கொண்டனர். படத்தில் அக்ஷரா ஹாசன் சில காட்சிகளில் நடித்ததாக செய்திகள் வெளியானது. சீனுவாக விஜய் ஆண்டனி, விஜியாக அக்ஷரா ஹாசனும்,
ரஞ்சித் எனும் பாத்திரத்தில் அருண் விஜய்யும் நடித்து வருகின்றனர்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. ரஷ்ய நாட்டில் மைனஸ் 15 டிகிரியில் கடும் பனிப்பொழிவில் படக்குழுவினர் இருப்பது பாராட்டிற்குரியது.