தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.இவர் நடிப்பில் கடைசியாக இவரது 25ஆவது திரைப்படமான பூமி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து அஹ்மத் இயக்கத்தில் ஜன கன மன,மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட சில முக்கிய படங்களில் நடித்து வந்தார் ஜெயம் ரவி.

பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை சில மாதங்களுக்கு முன் நிறைவு செய்தார் ஜெயம் ரவி.இவற்றை அடுத்து இவர் நடிக்கும் அகிலன் படத்தினை பூலோகம் பட இயக்குனர் கல்யாணகிருஷ்ணன் இயக்குகிறார்.இந்த படத்தை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

ப்ரியா பவானி ஷங்கர்,தான்யா ரவிச்சந்திரன் இந்த படத்தின் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.தற்போது இந்த படத்தின் மேக்கிங் வீடியோ கிளிம்ப்ஸ் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்து விட்டது கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.தற்போது இந்த படத்தின் டீஸர் வரும் ஜூன் 10ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Sneak Peek into the spirit of @actor_jayamravi as #HarbourAgilan here in this #AgilanPrelude02#AgilanTeaser on June 10th#DirKalyan @priya_Bshankar @actortanya @SamCSmusic @vivekcinema @RVijaimurugan @Pallavi_offl @skiran_kumar @senthilkumarsmc @harishuthaman @JaniChiragjani pic.twitter.com/cCdebfFXdL

— Screen Scene (@Screensceneoffl) June 8, 2022